குடியுரிமை திருத்த சட்டம் : ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் - ஒரே இடத்தில் நடந்ததால் பரபரப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஒரே இடத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-03 23:00 GMT
கோவை,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்ட கோர்ட்டு வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். வக்கீல்கள் அருள்மொழி, மலரவன், வெண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இ்தில் வக்கீல்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷமிட்டனர். மேலும் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா வக்கீல் பிரிவு சார்பில் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட வக்கீல்கள், குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பில்லை என்று கோஷமிட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஒரே இடத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்