தபால் வாக்குகள் வழங்காததால் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சேதுபாவாசத்திரம் அருகே தபால் வாக்குகள் வழங்காததால் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-31 22:15 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு சேதுபாவாசத்திரம், பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி என பல்வேறு இடங்களில் உள்ளாட்சி தேர்தல் பணி வழங்கப் பட்டிருந்தது.

காத்திருப்பு போராட்டம்

இந்தநிலையில் தபால் வாக்குகளை பதிவு செய்ய சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்த பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலருக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்