சூளகிரி அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்
சூளகிரி அருகே, ஓடும் காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினார்கள்.
சூளகிரி,
கர்நாடகா மாநிலம், பெங்களூரு இஸ்கான் கோவில் அருகே உள்ள வசந்தபுரா மாருதி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 55). இவரது மனைவி சுகுணா (53). இவர்களுக்கு, மணிகண்டன் (29), சந்தோஷ்குமார் (27) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் பெங்களூருவுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளி அருகே நேற்று அதிகாலை கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் டிரைவர் காரை ஓரமாக நிறுத்த முயன்றார். அதற்குள் காரில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
கார் எரிந்தது
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்ற நபர், காரில் இருந்தவர்களை கீழே இறங்க செய்து காப்பாற்றினார். தீ மளமளவென பரவியதால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. காரில் ஏ.சி., பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்கசிவு ஏற்பட்டு, கார் தீப்பிடித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால், வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.