தபால் ஓட்டு போட அனுமதிக்கக்கோரி அங்கன்வாடி-சத்துணவு பணியாளர்கள் தர்ணா
தபால் ஓட்டு போட அனுமதிக்கக்கோரி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அங்கன்வாடி-சத்துணவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், உதவியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 27-ந் தேதி அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே தேர்தல் தொடர்பாக கடந்த 26-ந் தேதி பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது. ஆனால் தபால் ஓட்டு போடுவதற்கான படிவம்-15 வழங்கப்படவில்லை. இதனால் படிவம்-15-ஐ பெற முடியாமல் 300-க்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டு போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தர்ணா
இந்த நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டு வேலைக்கு திரும்பிய அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், நூலக பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநில தலைவி வாசுகி தலைமையில் திரண்டு தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதிக்கக்கோரி நேற்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகணேசன், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் உரிய பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.