குமரியில் 2 இடங்களில் நடந்தது தூய்மையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்
தூய்மையை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் ெகன்யாவை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனை முதலிடம் பிடித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் பசுமை மற்றும் தூய்ைமயை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய 2 இடங்களில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் வெளி மாநிலம் மற்றும் குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் மாரத்தானில் பங்கேற்றனர்.
போட்டியானது 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதாவது 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் ஆகிய 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. அனைத்து பிரிவுகளிலும் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
காந்தி மண்டபம்
இதில் 21 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டிய மாரத்தான் போட்டி கன்னியாகுமரி காந்திமண்டபம் முன் இருந்து தொடங்கியது. பின்னர் கோவளம், மணக்குடி, புத்தளம், பறக்கை, கோட்டார் மற்றும் அண்ணா பஸ் நிலையம் வழியாக வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் முடிவடைந்தது.
இதே போல 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இருந்து தொடங்கியது. பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார் மற்றும் ஒழுகினசேரி வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் வந்து முடிவடைந்தது. மேலும் 5 கிலோ மீட்டர் மாரத்தான் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இருந்து வேப்பமூடு சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார், ஒழுகினசேரி வழியாக வந்து தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு
கன்னியாகுமரியில் தொடங்கிய மாரத்தான் போட்டியை ரெயில்வே மற்றும் தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். பின்னர் தானும் மாரத்தானில் பங்கேற்று ஓடி வந்தார். இதே போல அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இருந்து தொடங்கிய 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்து அவரும் ஓடினார்.
போட்டியின்போது வழிநெடுகிலும் தன்னார்வலர்கள் நின்று மாரத்தான் ஓடிய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தண்ணீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். மேலும் பல இடங்களில் மக்கள் ைக தட்டி உற்சாகப்படுத்தினர்.
கென்யா வீரர்
மாரத்தான் போட்டியில் 21 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை ெகன்யாவை சேர்ந்த மைக்கேல் என்பவர் பிடித்தார். 2 மற்றும் 3-ம் இடங்களையும் கென்யாைவ சோ்ந்தவர்களே பிடித்தனர். இதே போல பெண்கள் பிரிவில் முதல் இடத்தை கென்யா நாட்டை சேர்ந்த ஜாக்லின் இக்பட்டானி என்பவர் பிடித்தார். 2-வது இடத்தை கேரளாவை சேர்ந்த ஆஷாவும், 3-வது இடத்தை கோவையை சேர்ந்த சோனாவும் பிடித்தனர்.
மேலும் 10 கிலோ மீட்டா் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை சிவபிரபாகரனும், பெண்கள் பிரிவில் சவுமியாவும் பிடித்தனர். 5 கிலோ மீட்டா் ஓட்டத்தில் முதல் இடத்தை அபினேசும், பெண்கள் பிரிவில் அஜிதாவும் பிடித்தார்கள். ேபாட்டிகள் முடிந்ததும் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடன நிகழ்ச்சி நடந்தது.
பரிசு
மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிசு வழங்கினார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கும் சிறப்பு பரிசை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.