குளித்தலை ஒன்றியத்தில் வார்டுகள் இணைப்புக்கு எதிர்ப்பு: தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த பொதுமக்கள்
குளித்தலை ஒன்றியத்தில் வார்டுகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், திம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 1-வது வார்டான திம்மம்பட்டி, கோமாளிப்பாறை மற்றும் 2- வது வார்டான ரெத்தினம்பிள்ளைபுதூர் ஆகிய பகுதிகள் கடந்த 2011-16-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சிமன்ற தேர்தலில் 8-வது ஒன்றியக்குழு வார்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் 3-வது வார்டுடன் 2 வார்டுகளும் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகளை கண்டித்தும் திம்மம்பட்டி, கோமாளிப்பாறை மற்றும் ரெத்தினம்பிள்ளைபுதூர் பகுதி பொதுமக்கள் சார்பில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக துண்டு பிரசுரங்கள் ஒட்டினர். இந்தநிலையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் திம்மம்பட்டி, கோமாளிப்பாறை பகுதியில் கருப்புகொடி கட்டியிருந்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து குளித்தலை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை திம்மம்பட்டி, கோமாளிப்பாறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உள்ளாட்சி தேர்தல் நாளை (இன்று) நடைபெறவுள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது.
அடுத்த உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றத்தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்தனர். பலமணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு திம்மம்பட்டி, கோமாளிப்பாறை பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு, தேர்தலில் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.