வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது
வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவையொட்டி வாக்குப்பதிவு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது
வேப்பந்தட்டை,
உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 29 கிராம ஊராட்சிகளுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 39 கிராம ஊராட்சிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 93,997 ஆண் வாக்காளர்களும், 97,117 பெண் வாக்காளர்களும், 11 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1,91,122 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 181 வாக்குச்சாவடிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 174 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 355 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவினை வாக்காளர்கள் அறியும் வகையில் சாலையில் பெயிண்ட் மூலம் கோடு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவின் போது குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகளான சாய்வுதள வசதி, சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவைகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
வாக்கு பெட்டிகள் லாரிகள் மூலம் அனுப்பி வைப்பு
இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 72 வகையான பொருட்கள் அடங்கிய பெட்டி ஆகியவை அனுப்பும் பணி, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று மதியம் நடைபெற்றது. அதன்படி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 181 வாக்குச்சாவடிகளுக்கு, 652 வாக்கு பெட்டிகளும் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 174 வாக்குச்சாவடிகளுக்கு 608 வாக்கு பெட்டிகளும் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட் களும் அலுவலர்கள், ஊழியர்கள் உதவியுடன் போலீசார் லாரிகள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், அந்தந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குவதால் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளது. 2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும் பிரிதொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளது. வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் போலீசார், ஊழியர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் தபால் ஓட்டுப்போட்டனர்.