நிரம்பி வழியும் மானூர் பெரியகுளம் கலெக்டர் ‌ஷில்பா பார்வையிட்டார்

மானூர் பெரியகுளம் நிரம்பி வழிகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா பார்வையிட்டார்.

Update: 2019-12-28 23:00 GMT
நெல்லை, 

மானூர் பெரியகுளம் நிரம்பி வழிகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா பார்வையிட்டார்.

மானூர் பெரியகுளம் நிரம்பியது

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகாவில் மானூர் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் தமிழக அரசு சார்பில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டன. தற்போது பெய்த மழையின் காரணமாக மானூர் பெரியகுளம் நிரம்பி வழிகிறது.

இதனை நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா நேற்று பார்வையிட்டார். பின்னர் அந்த குளத்துக்கு மலர் தூவினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மானூர் பெரியகுளத்தின் மொத்த பரப்பளவு 448 எக்டர் ஆகும். இந்த குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள விஜயநாராயணம் குளத்துக்கு அடுத்தபடியாக பெரிய குளம் மானூர் பெரிய குளமாகும்.

1,500 விவசாயிகள்

தற்போது இந்த குளத்தில் 180 நாட்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளது. 2 போகம் விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளம் மூலம் சுமார் 1,500 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மறுகால் நிரம்பி வழியும் தண்ணீர் பள்ளமடை குளத்துக்கு பாசன வசதிக்காக செல்கிறது. கோடை காலம் வரை இந்த குளத்தின் நீரை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் இந்த குளம் மேலும் சீர் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சிற்றாறு வடிநீர் கோட்ட பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்