திருச்சி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
திருச்சி மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் நடக்கும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, தா.பேட்டை, துறையூர், தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 7 லட்சத்து 2 ஆயிரத்து 253 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
இருசக்கர வாகனத்தில் ஊர்வலம்
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவி, ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவி, கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் சின்னங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளை கட்டிக்கொண்டு வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டனர். நான் வெற்றிபெற்றால் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று ஒவ்வொரு வேட்பாளர்களும் வாக்காளர்களை கவரும் விதத்தில் பிரசாரத்தை மேற்கொண்டனர். வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் திறந்த ஆட்டோக்களிலும், திறந்த கார்களிலும் நின்று வாக்காளர்களை கைகூப்பி வணங்கி மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க தீவிரமாக வாக்கு சேகரித்தனர். நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் அவர்களது ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.
குத்தாட்டம்
முசிறி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிராமங்கள் தோறும் ஊர்வலமாக சென்று வாக்காளர்களை சந்தித்து இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் அச்சடித்து தங்களது சின்னங்களை விளம்பரப்படுத்த ஆர்வம் காட்டினர். சுவர் விளம்பரம் எழுதுவதை தவிர்த்தனர். இதேபோன்று முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களிலும் அதிகளவில் பிரசாரம் செய்தனர்.
கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிராமங்களில் ஆட்டோக்கள் மூலமாகவும், மேடை நடன கலைஞர்கள் குத்தாட்டம் போட்டும், கட்சி தலைவர்கள் வேடமணிந்தும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.
இதேபோன்று தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
தென்னை மரம், கரும்புடன் வாக்குசேகரித்த வேட்பாளர்கள்
துறையூர் அடுத்து உள்ள புத்தனாம்பட்டி, அபினிமங்கலம், திண்ணனூர் ஆகிய கிராமங்களுக்கு முசிறி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ேபாட்டியிடும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கரும்புடன், சென்று வாக்குசேகரித்தார். மேலும் பல்வேறு பகுதிகளில் நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கரும்புகளை வைத்துக்கொண்டு, தலையில் தலைப்பாகை அணிந்து வாக்குசேகரித்ததை காண முடிந்தது.
இதுபோல் அ.ம.மு.க. வேட்பாளர்கள் சிலர் சரக்கு வாகனத்தில் சிறிய தென்னை மரத்தை வெட்டி ைவத்து வாக்குசேகரித்தனர். இதுபோல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க இறுதிக்கட்ட பிரசாரத்தில் பல்வேறு நூதன முறைகளை கையாண்டனர்.
அமைதியாக...
கடந்த ஒரு வார காலமாக தேர்தல் பிரசாரத்தால் விழாக்கோலம் பூண்டிருந்த கிராமங்களில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்ததால், திருவிழா முடிந்தது போன்று அமைதியாக காணப்பட்டது.