சங்கரன்கோவில் அருகே புதிய கால்நடை மருத்துவ ஆஸ்பத்திரி அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்

சங்கரன்கோவில் அருகே செந்தட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவஆஸ்பத்திரி கிளைதிறப்பு விழா நடைபெற்றது.

Update: 2019-12-28 22:00 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே செந்தட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவஆஸ்பத்திரி கிளைதிறப்பு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தியோபிளஸ் ரோஜர் முன்னிலை வகித்தார். 

விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு, கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து 198 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில், இந்த பகுதி மக்கள் இதற்கு முன்னால் தங்களின் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வெகு தூரம் செல்ல வேண்டியிருந்தது. அதனால் இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இங்கு கால்நடை மருத்துவ கிளை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்கள் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்றார்.

விழாவில் நெல்லை கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன், நெல்லை உதவி இயக்குனர் கலையரசு, சங்கரன்கோவில் உதவி இயக்குனர் ரகுமத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாகுறிச்சியில் கால்நடை கிளை மருந்தகம், மைப்பாறை மற்றும் புளியம்பட்டி கிராமங்களில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.3.80 லட்சம் மதிப்பில் பஸ்நிறுத்தம் ஆகியவற்றை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன், சங்கரன்கோவில் தாசில்தார் திருமலைசெல்வி, திருவேங்கடம் தாசில்தார் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணபதி, ஜெயராமன், என்ஜினீயர் ரமே‌‌ஷ், ஒன்றிய மேற்பார்வையாளர் கணேசன், கால்நடை மருத்துவர் முருகன், சுகாதார ஆய்வாளர் குருமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்