சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 1,754 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு
சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 1,754 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட 12 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்து முடிந்துள்ளது. அனைத்து வாக்குப்பெட்டிகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மாவட்டத்தில் 2-ம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாபட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல் மற்றும் வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
1,754 பதவிகள்
இந்த தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 62 பேரும், 119 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். இது போக மீதமுள்ள 117 பதவிகளுக்கு 505 பேரும், 191 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 5 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றது போக மீதமுள்ள 186 பதவிகளுக்கு 760 பேரும் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர, 1,683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 244 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். மீதமுள்ள 1,439 பதவிகளுக்கு 4,596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2,005 பதவிகளில் 251 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 1,754 பதவிகளுக்கு 5,923 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 6 லட்சத்து 68 ஆயிரத்து 779 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
1,173 வாக்குச்சாவடிகள்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 127 வாக்குச்சாவடிகளும், அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் 198 வாக்குச்சாவடிகளும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 111 வாக்குச்சாவடிகளும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 130 வாக்குச்சாவடிகளும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 178 வாக்குச்சாவடிகளும், சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 102 வாக்குச்சாவடிகளும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 198 வாக்குச்சாவடிகளும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 129 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,173 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவுக்கு தேவையான 72 பொருட்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்டமாக நடக்கும் தேர்தலில் 9 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். இதுதவிர, பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருட்கள் அனுப்பி வைப்பு
இதனிடையே, சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் இடங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டன. கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள் சரிபார்த்து 111 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைத்தனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.