வண்டலூர் பூங்கா ஏரியில் பறவைகளை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு பூங்கா நிர்வாகம் தகவல்

ஓட்டேரி ஏரியை மீண்டும் புத்துயிர் பெற பூங்கா நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தற்போது ஏரியில் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2019-12-27 22:15 GMT
வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவிற்குள் வண்டலூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஓட்டேரி ஏரிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான நீர் பறவைகள் மற்றும் புலம் பெயர்ந்த பறவைகள் வருவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலாலும், அதன்பின் ஏற்பட்ட வறட்சியின் காரணமாகவும் ஓட்டேரி ஏரி வறண்டு காணப்பட்டது.

இதையடுத்து ஓட்டேரி ஏரியை மீண்டும் புத்துயிர் பெற பூங்கா நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தற்போது ஏரியில் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களை முன்னிட்டு முன்பு இருந்தது போன்று சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஏற்பாடு செய்தது. தற்போது சுற்றுலா பயணிகள் நீர் பறவைகளை அதன் இருப்பிடமான ஏரியில் கண்டுகளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்