ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு

ஒன்றிய அலுவலகங் களில் இருந்து வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-12-26 23:00 GMT
அன்னவாசல்,

அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்பட ஆயிரத்து 398 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவையொட்டி, அன்னவாசல் ஒன்றியம் 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 203 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தளவாட பொருட்கள் அனுப்பி வைப்பு

அந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள், தாள் முத்திரை, அழியாத மை உள்ளிட்ட 72 வகையான தேர்தல் தளவாட பொருட்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் அதிகாரி தலைமையில் அனுப்பும் பணி நேற்று ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தளவாட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை, விராலிமலை

இதேபோல் விராலிமலை ஒன்றியத்தில் அமைக்கப்பட்டு உள்ள 225 வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான தளவாட பொருட்கள் நேற்று காலை முதல் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டு உள்ள 149 வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்களும் நேற்று காலை முதல் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.


மேலும் செய்திகள்