பெற்றோர் கண்டித்ததால் வண்டலூர் பூங்கா ஊழியர் - தூக்குப்போட்டு தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் வண்டலூர் பூங்கா ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-26 22:15 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). இவர் வண்டலூர் பூங்காவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் வண்டலூர் பூங்கா அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்து வந்தார். இதனை கண்டித்த அவரது பெற்றோர் ஏன் கோவிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்து வருகிறாய். ஒழுங்காக வேலைக்கு போ என்று கண்டித்துள்ளனர்.

இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்ட பார்த்திபன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்