முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு வாக்குப்பதிவு பெட்டி, ஆவணங்களை எடுத்துச்செல்ல 175 வாகனங்கள்
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு வாக்குப்பதிவு பெட்டி, ஆவணங்களை எடுத்துச்செல்வதற்காக 175 வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை டி.ஐ.ஜி. மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்,
உள்ளாட்சி தேர்தல் தஞ்சை மாவட்டத்தில் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக நாளை(வெள்ளிக்கிழமை), 7 ஒன்றியங்களுக்கும், 2-வது கட்டமாக 30-ந் தேதி 7 ஒன்றியங்களுக்கும் என 14 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு வாக்குப்பெட்டிகளை, வாக்கு சாவடிக்கு கொண்டு செல்வதற்கான வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், வட்டார போக்குவரத்து அதிகாரி பரிதி இளம்வழுதி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு மேற்கொண்டனர்.
175 வாகனங்கள்
முதல் கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு 175 வாகனங்களும், 2-வது கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு 175 வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் மூலம் வாக்குப்பெட்டிகள், ஆவணங்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன.
இந்த வாகனங்களுக்கான ஆர்.சி. புத்தகம், ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா? என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்தல் பணிக்காக செல்லும் வாகனங்கள் வாக்கு பெட்டிகளை எடுத்து சென்று, வாக்குச்சாவடி மையத்தில் சேர்த்து விட்டு வாக்குப்பதிவு முடிந்தவுடன் மீண்டும் வாக்குப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.