வீட்டுமனை பட்டா கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்,
சேலம் மாவட்ட அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச்சங்கம், இந்திய கம்யூனிஸ்டு் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட்) ஆகியவை சார்பில் நேற்று சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்வராஜ், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன் வரவேற்றார்.
சொந்த வீடு இல்லாத கட்டுமானம், விசைத்தறி மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் அல்லது வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு உடனடியாக மாத வாடகை படியை வழங்க வேண்டும், கடன் தொகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஒரு லட்சம் வீடுகள்
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
சேலம் மாநகரில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் சுமார் 3 லட்சம் ஏழை தொழிலாளர்கள் நிலைமை படுமோசமாக உள்ளது. கட்டுமானம், விசைத்தறி மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் தினக்கூலிகளாக பணியாற்றும் தொழிலாளர்களின் மாதக்கூலி சம்பளம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை தான் உள்ளது.
அவர்கள் செலுத்தும் வாடகையோ ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையுள்ளது. இதனால் அவர்களது வருமானத்தில் 30 சதவீத பங்கை வாடகை பறித்துவிடுகிறது. எனவே சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு லட்சம் வீடற்ற ஏழைகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.