தூக்கமாத்திரைகளை தின்று உயிரை மாய்க்க மனைவி முயன்றதால், தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

பெருமாநல்லூர் அருகே தூக்க மாத்திரைகளை தின்று உயிரை மாய்க்க மனைவி முயன்றதால், தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-23 22:00 GMT
பெருமாநல்லூர், 

பெருமாநல்லூர் அருகே உள்ள தொரவலூரை சேர்ந்தவர் சங்கர்(வயது 38). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி மாலா (35). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சங்கர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. எனவே மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த மாத்திரை சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. ஆனாலும் அவரால் மது குடிக்கும் பழகத்கத்தை விட முடியவில்லை.

இருப்பினும் தொடர்ந்து மதுகுடித்து வந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் சங்கர் மது குடித்ததால், இது குறித்து அவருடைய மனைவி மாலா கேட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் மாலதியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதால் வேதனை அடைந்த சங்கர், மது குடித்துவிட்டு வந்து வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்