விருத்தாசலம் அருகே வாகன சோதனை: ஆவணமின்றி எடுத்து சென்ற 250 காமாட்சி விளக்குகள் பறிமுதல்
விருத்தாசலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 250 காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம்,
ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வேட்பாளர்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விருத்தாசலம் ஒன்றியத்துக்குட்பட்ட 1-வது பறக்கும் படை அதிகாரி சையத் அபுதாகிர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், காவலர்கள் பிரபாகரன், பாலு ஆகியோர் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் விஜயமாநகரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
250 விளக்குகள்
அப்போது உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஒரு காரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். அதில் 250 பித்தளை காமாட்சி விளக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலையை சேர்ந்த பாத்திரக்கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியன்(வயது 61) என்பதும், கும்பகோணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காமாட்சி விளக்குகளை எடுத்து சென்றதும் தெரியவந்தது ஆனால் அந்த விளக்குகளை எடுத்துச்செல்வதற்கான உரிய ஆவணம், அவரிடம் இல்லை.
இதையடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 250 காமாட்சி விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த விளக்குகள் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.1 லட்சம்
இதேபோல் வேப்பூர் அருகே கண்டப்பங்குறிச்சியில் தாசில்தார் முகமது அசைன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.1 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சுகுமார் மனைவி லதா என்பதும், நெய்வேலியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சம் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை நல்லூர் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.