திருப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு - கர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்
திருப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் சாரைப்பாம்பு புகுந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் பாம்பு இருப்பதாக அங்கு இருந்த செவிலியர் கூறியதால் மருத்துவமனையில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழுந்தைகள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மருத்துவமனையில் இருந்த சாரைப்பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு இருந்து தான் பாம்புகள் அடிக்கடி வருகிறது. நேற்று முன்தினம் கூட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் 2 பாம்புகளை பிடித்து உள்ளனர்’ என்றனர்.