சாராயம் விற்ற பெண் கைது வீடுகளை சோதனை செய்த போலீசாரை கண்டித்து சாலைமறியல்

வேளாங்கண்ணி அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தமில்லாத வீடுகளை சோதனை செய்த போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-22 22:30 GMT
வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே வடுகச்சேரி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வடுகச்சேரி பகுதியில் உள்ள 2 வீடுகளில் சாராயம் விற்பனை செய்தவர்கள் மறைந்து இருப்பதாக வேளாங்கண்ணி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அந்த வீடுகளில் அவர்கள் இல்லை என்பதால், மீண்டும் அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டு சாராயம் விற்ற வடுகச்சேரி மூங்கில்குடி வீரன் கோவில் தெருவை சேர்ந்த கலா (வயது 55) என்பவரை கைது செய்தனர்.

சாலை மறியல்

கைது செய்யப்பட்ட கலாவிற்கும், சோதனை நடந்த 2 வீட்டுக்காரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், அந்த வீடுகளை போலீசார் சோதனை செய்ததை கண்டித்து, வடுகச்சேரி பொதுமக்கள் நேற்று தேவூர் செம்பியன்மாதேவி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆராக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி, இந்த பகுதியில் சாராயம் விற்பனை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்