நிதி நிறுவனம் நடத்தி ரூ.8½ கோடி மோசடி செய்த 3 பேர் கைது மேலும் 7 பேருக்கு வலைவீச்சு
நாகர்கோவிலில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.8½ கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை காந்தி நகரைச் சேர்ந்தவர் திஷான் பிராங்கிளின் (வயது 27), என்ஜினீயர். இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டியனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி நெசவாளர் காலனியைச் சேர்ந்த பிரவீன் (38) என்பவர் வெட்டூர்ணிமடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனராக விழுந்தயம்பலம் பனங்காலவிளையைச் சேர்ந்த சோபன் (42) என்பவரும், ஏஜெண்டாக அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் செம்மண்விளையைச் சேர்ந்த ரெதீஸ் (40) என்பவரும் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 3 பேரும் கடந்த 2013-ம் ஆண்டு என்னிடம். அவர்களது நிதி நிறுவனத்தில் 6 ஆண்டு நிதி சேமிப்புத் திட்டத்தில் மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் கட்டினால் சேமிப்புத்தொகை ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்துடன், வட்டியும் சேர்த்து ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் வழங்கப்படும் என்று ஆசைவார்த்தைகள் கூறினர்.
நானும் அதை நம்பி சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்தேன். எனது சேமிப்புத் திட்ட காலம் முடிந்த பின்னரும் எனது பணத்தை அவர்கள் திரும்பத்தரவில்லை. நான் பணத்தை கேட்டபோது, ‘இப்போது தருகிறோம்... பிறகு தருகிறோம்...’ என்று கூறி ஏமாற்றி மோசடி செய்தனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
3 பேரிடம் விசாரணை
இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சார்லட், ரோஸ்மேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் தலைமறைவாக இருந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரவீன், இயக்குனர் சோபன், ஏஜெண்டு ரெதீஸ் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் வெளியான தகவல்கள் வருமாறு:-
இவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு இந்த நிதி நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். முதலில் 2 ஆண்டு சேமிப்புத்திட்டத்தை தொடங்கி நடத்தினர். இதில் சேர்ந்து மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் சேமிப்பவர்களுக்கு முடிவில் அவர்கள் சேமித்த பணம் ரூ.24 ஆயிரத்துடன் கூடுதலாக 10 ஆயிரம் வட்டியாக கொடுத்துள்ளனர். முதலில் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்த அனைவருக்கும் முதிர்வுத்தொகையை சரியாக கொடுத்துள்ளனர்.
பணம் கொடுக்கவில்லை
பின்னர் மார்த்தாண்டத்தில் ஒரு கிளையும், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையிலும் கிளைகளை தொடங்கினார்கள். இவர்களது நிதி நிறுவன கிளைகளின் சேமிப்புத்திட்டங்களில் பொதுமக்களை அதிகமாக சேர்க்கும் ஏஜெண்டுகளுக்கு கார்களையும் பரிசாக கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு 6 ஆண்டு சேமிப்புத் திட்டங்களை தொடங்கினர். மாதம் ரூ.1000, ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பல்வேறு சேமிப்புத்திட்டங்களில் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர். ஏராளமானோர் கவர்ச்சிகரமான வட்டியை நம்பி இந்த நிதி நிறுவன கிளைகளில் சேர்ந்தனர். ஆனால், சேமிப்புத்திட்டம் முதிர்வடைந்தபிறகு யாருக்கும் இவர்கள் பணத்தை திரும்ப வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. முதிர்வுத்தொகையை திரும்பக் கேட்ட சேமிப்புதாரர்களிடம் நெல்லை, தூத்துக்குடி, கேரளா மாநிலங்களில் நிறைய நிலம் வாங்கி போட்டுள்ளோம். அதை விற்று உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்து விடுவோம் என்று கூறி சேமிப்புத்திட்ட பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திஷான் பிராங்கிளின் பத்திரத்தை ெகாடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் 7 பேருக்கு தொடர்பு
இவர்கள் 3 பேரும் குமரி மாவட்டத்தில் மட்டும் 450 பேரிடம் ரூ.1½ கோடி வரையும், பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலும் சேர்த்து மொத்தம் 1,700 பேரிடம் சுமார் ரூ.8½ கோடி வரை மோசடி செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பணம் செலுத்தி ஏமாந்தவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளிகள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டியன் தலைமையிலான போலீசார், பிரவீன், சோபன், ரெதீஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மதுரையில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த மோசடி சம்பவத்தில் ேமலும் 7 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஏமாறாதீர்கள்
மேலும் துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டியன் கூறுகையில், கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறுவதை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை நம்பகத்தன்மையற்ற நிதி நிறுவனங்களில் செலுத்தி ஏமாறாதீர்கள். அரசு வங்கிகளில் சேமித்தால் வட்டி குறைவாக கிடைத்தாலும் பணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே இதை மனதில் கொண்டு விழிப்புணர்வோடு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.