மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு - கணவர் கண் எதிரே பரிதாபம்
மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி, கணவர் கண் எதிரேயே பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
சென்னை,
சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் சூரியநாராயணன். இவருடைய மனைவி எழிலரசி (வயது 59). கணவன்- மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு அண்ணாசாலை வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
சர்ச் பார்க் பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த காரை சூரியநாராயணன் முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சூரியநாராயணன் மோட்டார் சைக்கிளின் பிரேக்கை பிடித்ததால் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் சாலையில் விழுந்த எழிலரசி மீது பின்னால் வந்து கொண்டிருந்த மாநகர பஸ்சின்(தடம் எண் இ-18) பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய எழிலரசி, சம்பவ இடத்திலேயே தனது கணவர் கண்எதிரே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சூரியநாராயணன், சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சூரியநாராயணனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பலியான எழிழரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாநகர பஸ் டிரைவரான திண்டிவனத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(40) என்பவரை கைது செய்தனர்.