பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2019-12-21 22:30 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதற்கு மாநில துணைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர்கள் இளம்பரிதி, அல்மாஸ்அலி, முகமதுப‌ஷீர், தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் அப்துல்காதர் வரவேற்றார்.

விழாவில் மாநில தலைவர் வேலுசாமி கலந்து கொண்டு பேசினார். டாக்டர்கள் சாந்தி, அருண் ஆகியோர் கண், நுரையீரல் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

8 மணிநேர பணி

இதில், போலீஸ் துறையினருக்கு தனி ஊதியக்குழு அமைக்க வேண்டும். போலீசாருக்கு தினமும் 8 மணிநேர பணி வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும். வாரம் ஒரு நாள் கட்டாய ஓய்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணியின்போது இறக்கும் போலீசாரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். வாரிசுதாரர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்.

போலீசார் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மத்தியஅரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதுபோல மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் இறந்தால் கேரளாவில் செய்வதைபோல் மரியாதை செலுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ்துறையினருக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட தலைவர் தேவன், மாவட்ட துணை செயலாளர் பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்நெல்சன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வைரம், கோவிந்தராஜன், ராஜகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார். நிகழ்ச் சியை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அருளானந்து தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்