பள்ளிநேளியனூர், ரெயில்வே கேட்டில் மின் கம்பத்தில் லாரி மோதி மின்சாரம் துண்டிப்பு
பள்ளிநேளியனூர் ரெயில்வே கேட்டில் கன்டெய்னர் லாரி மோதி மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் புதுச்சேரி-விழுப்புரம் இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருபுவனை,
புதுவை-விழுப்புரம் இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று பிற்பகலில் மடுகரையிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி மதகடிப்பட்டு நோக்கி வந்தது.
அந்த லாரி பள்ளிநேளியனூரில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்தபோது அங்கு தண்டவாளத்தையொட்டியிருந்த ரெயில் என்ஜின்களுக்கு மின்சாரம் வினியோகிக்கும் மின் கம்பத்தில் மோதியது. அதன் காரணமாக மின்சாரம் சப்ளை செய்யும் உயர்மின்னழுத்த மின்கம்பி துண்டிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் அந்த பாதையில் வந்து கொண்டிருந்தது. மின்கம்பி துண்டிக்கப்பட்டதால் அந்த ரெயில் என்ஜினுக்கு கிடைத்த மின்சாரம் தடைபட்டது. அதனால் அந்த ரெயில் நடு்வழியில் புதுச்சேரி ரோடியர்மில் ரெயில்வே கேட்டுக்கு முன்பாக நின்றுவிட்டது. அதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தண்டவாள பாதையில் நடந்து சென்றனர்.
இதுகுறித்து அங்கு பணியில் இருந்த கேட்கீப்பர் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து பழுது நீக்கும் ரெயிலுடன் ஊழியர்கள் வந்து துண்டிக்கப்பட்ட மின்கம்பியை இணைத்து மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாலையில் இந்த பணிகள் முடிவடைந்தன. அதன்பின் திருப்பதி-புதுச்சேரி ரெயில் புதுச்சேரி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரியிலிருந்து செல்லும் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டன.
குறிப்பாக பிற்பகல் 3-15 மணிக்கு புதுவையிலிருந்து சென்னை செல்லும் ரெயில் 6.05 மணிக்கும், மாலை 4 மணிக்கு புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் பாசஞ்சர் ரெயில் 6-50 மணிக்கும் புறப்பட்டு சென்றது.