ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி: தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு - பெண் தொழிலாளர்கள் போராட்டம்
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பாகூர்,
புதுவை மாநிலம் கன்னியக்கோவில் வார்க்கால் ஓடை கிராமம் உள்ளது. இங்கு கொசுவர்த்தி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பகல், இரவு ஷிப்டுகளில் கடலூர், பாகூர், கன்னியக்கோவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 500 பெண்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி நீண்ட நாட்களாக வலியுறுத்தியும், ஊதியம் உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில் ஊதிய உயர்வு, பணியின்போது ஓய்வு நேரத்திற்காக ஊதியத்தில் பிடித்தம் செய்வதை தவிர்க்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 6.30 மணியளவில் வேலைக்கு வந்த பெண்களும், இரவு பணி முடிந்து வெளியே வந்த தொழிலாளர்களும் தனியார் நிறுவனத்தின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த தனவேலு எம்.எல்.ஏ., அங்கு வந்து பெண் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று, தனியார் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றும், அதுபற்றி ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெண் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 3 மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.