குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது

கும்பகோணத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-12-19 23:00 GMT
கும்பகோணம்,

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கும்பகோணத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் கும்பகோணம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் காளியப்பன், தஞ்சாவூர் மாவட்ட ஒங்கிணைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கைது

ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், இந்த சட்டத்தினை எதிர்த்து வட மாநிலங்களில் போராடும் மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்