10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கோட்ட அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் (பொறுப்பு) முருகேசன் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கிராமிய தபால் ஊழியர்கள் அனைவருக்கும் அரசாங்க ஊழியர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும். குரூப் இன்சூரன்சு ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 180 நாட்களுக்கு சேமிப்பு விடுப்பின் பணப்பலன்கள் பெற உத்தரவிட வேண்டும். அனைவருக்கும் மருத்துவக்காப்பீடு வசதிகள் செய்து தர வேண்டும்.
பணிமாறுதல்
பணிமாறுதல் வரையறைகள் தளர்த்தப்பட்டு அந்தந்த கோட்டத்திற்குள் மாறுதல் என்றால் கோட்ட அதிகாரிகளாலும், மண்டலத்திற்குள் என்றால் அந்த மண்டல அதிகாரிகளாலும் பணிமாறுதல்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஓய்வு பெறுபவர்களுக்கு உடனே பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர்கள் குடியரசன், ஜோசப்ஆரோக்கியதாஸ், செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், தமிழரசன், பொருளாளர்கள் சுப்பையன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.