புவனகிரி அருகே, விவசாயியை தாக்கி பணம் பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

புவனகிரி அருகே விவசாயியை தாக்கி பணம் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-18 21:45 GMT
புவனகிரி,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள டி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (50). விவசாயி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் புவனகிரிக்கு புறப்பட்டு சென்றனர்.

புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராமத்தில் உள்ள மதகு அருகே காரை நிறுத்திவிட்டு அவர்கள் 2 பேரும் அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், நாகராஜன், சாம்பசிவத்திடம் இங்கு எதற்கு வந்தீர்கள் என்று கூறி அவர்களை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

தொடர்ந்து மர்மநபர்கள் சாம்பசிவத்திடம் இருந்த ரூ.33 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து நாகராஜன் புவனகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்