குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சியில் தீவிரமாகும் போராட்டம்: கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திருச்சியில் போராட்டம் தீவிரமாகிறது. கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞர் பெருமன்றத்தினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சியில் கடந்த 16-ந் தேதியும், நேற்று முன்தினமும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கூடுதலாக கல்லூரி மாணவர்கள் போராட்ட களத்தில் நேற்று குதித்தனர்.
சாலை மறியல்
திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வாசல் முன்பு போராட்டம் நடத்த திரண்டனர். மேலும் டி.வி.எஸ்.டோல்கேட்டில் உள்ள தண்ணீர் விழிப்புணர்வு ஸ்தூபி அருகே சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் போலீசார் விைரந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதியில்லை எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கல்லூரி வாசல் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர். இதையடுத்து சிறிது நேர மறியல் போராட்டத்திற்கு பின் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இதேேபால் திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கை தொடர்பாக பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். காலை முதல் மதியம் வரை இந்த போராட்டம் நடந்தது.இதற்கிடையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் உறையூர் குறத்தெருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைய தொடங்கி உள்ளதால் கல்லூரிகளின் நுழைவு வாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.