மாநகராட்சி துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - அதிகாரியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மாதவரத்தில் குடிபோதையில் பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளியை அதிகாரி கண்டித்ததால், அவர் மண்டல அலுவலகம் எதிரே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான அதிகாரியை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்குன்றம்,
இதனால் வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சமடைந்து மனமுடைந்த அவர், மண்டல அலுவலகம் அருகே உள்ள மரத்தில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த மாதவரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் தொழிலாளி டேனியல் தற்கொலைக்கு காரணமான அதிகாரியை கைது செய்ய கோரி, மண்டல அலுவலகம் முன்பு மாதவரம் செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ராஜன், முனுசாமி மற்றும் சங்க சட்ட ஆலோசகர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்துச் சென்றனர்.
சென்னையை அடுத்த மாதவரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டேனியல் (வயது 45). இவர் மாநகராட்சிக்குட்பட்ட மாதவரம் மண்டலம் 30-வது வார்டில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் டேனியல் நேற்று காலை குடித்துவிட்டு வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவரை அலுவலக அதிகாரி ஒருவர் கண்டித்ததாகவும், வீட்டுக்கு செல்லுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.