தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 10,647 பேர் வேட்புமனு தாக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 10,647 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2019-12-16 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஏராளமானோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இதன்படி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நேற்று 117 பேரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 922 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதேபோல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 795 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,815 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான நேற்று மொத்தம் 5,649 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று வரை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மொத்தம் 157 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1,410 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,703 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7,377 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 10,647 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்