காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் நானும் உள்ளேன்; கே.எச்.முனியப்பா சொல்கிறார்

முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

Update: 2019-12-16 23:00 GMT
பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் நானும் உள்ளேன். எனக்கு இந்த பொறுப்பை வழங்கினால் திறம்பட செயல்படுவேன். இதற்கு முன்பு கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கியது. அதை திறமையாக நிர்வகித்துள்ளேன். இந்த விஷயத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். அவர்களை நேரில் சந்திக்கும் திட்டம் இல்லை.

இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.

மேலும் செய்திகள்