40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் சிக்கியவர் மனைவிக்காக, திருந்தி வாழப்போவதாக அறிவிப்பு பரபரப்பு பேட்டி
40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் சிக்கிய வாலிபர் தனது மனைவிக்காக திருந்தி வாழப் போவதாக அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 30). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அவர் நேற்று தனது மனைவி கலாவுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
திருட்டு தொழிலை விட்டுவிட்டதாகவும், இனிமேல் திருந்தி வாழப் போகிறேன் என்றும் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர் மனைவி கலாவுடன் இணைந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன். சென்னைக்கு வந்து கொத்தனார் தொழில் செய்து வந்தேன். மேஸ்திரியை அடித்த குற்றத்துக்காக முதன் முதலாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றேன்.
அப்போது திருட்டு தொழில் செய்யும் நபர் ஒருவரோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் வெளியே வந்து ஒரே அறையில் தங்கி இருந்தோம்.
திருட்டு தொழில் செய்த நபரை கைது செய்த போலீசார் என்னையும் சேர்த்து கைது செய்தனர். என் மீதும் திருட்டு வழக்கு போட்டனர். செய்யாத குற்றத்துக்காக சிறைக்கு சென்ற நான், திரும்ப வந்து திருட்டு தொழிலை செய்ய தொடங்கிவிட்டேன்.
இரவு நேரங்களில் ஆளில்லாத பூட்டிய வீடுகளில் புகுந்து திருடுவேன். என் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பாதி வழக்குகள் நான் சம்பந்தப்பட்டவை. மீதி வழக்குகள் போலீசாரால் ஜோடிக்கப்பட்டவை.
திருட்டு தொழிலில் சம்பாதித்த நகைகள் எல்லாம் போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர்.
6 மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. எனது மனைவியின் ஆசைப்படி, நான் திருட்டு தொழிலை விட்டுவிட்டேன். கோர்ட்டில் உள்ள வழக்குகளை நான் சட்டப்படி சந்திப்பேன்.
இனிமேல் என் மீது புதிய வழக்குகள் எதுவும் போட கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடக் கோரி கமிஷனரிடம் மனு கொடுத்து உள்ளேன். புதிய வாழ்க்கையை தொடங்க போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.