ஊத்துக்குளி அருகே, மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் பலி

ஊத்துக்குளி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-12-11 22:45 GMT
ஊத்துக்குளி, 

திருப்பூர் போயம்பாளையம், நந்தா நகர் சங்கு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள உன்னிகிருஷ்ணன் என்பவரது மகன் விஷ்ணு (வயது 24) இவர் பாண்டியன் நகர் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் திருப்பூர் தியாகி குமரன் காலனி பகுதியை சேர்ந்த அப்துல் ஜாபர் என்பவரது மகன் அப்துல்கலாம் (21) நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று ஊத்துக்குளி அருகே மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை விஷ்ணு ஓட்டிச்சென்றார். இவர்களுக்குப் பின்னால் ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில்பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.

முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அப்துல் கலாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்