இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் யார்-யாருக்கு பதவி? கர்நாடக மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் - முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் யார்-யாருக்கு மந்திரி பதவி?, மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி அளித்தார்.
பெங்களூரு,
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு குறிப்பிட்ட துறையை வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர மந்திரி பதவியை எதிர்பார்த்து பா.ஜனதா மூத்த தலைவர்களும் காத்திருக்கிறார்கள். இதனால் மந்திரி பதவிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி நிஜலிங்கப்பாவுக்கு நேற்று 117-வது பிறந்தநாள் விழாவாகும். இதையொட்டி, பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த நிஜலிங்கப்பாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் முதல்-மந்திரி எடியூரப்பா மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் உடன் இருந்தார்கள்.
பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் இடைத்தேர்தல் தோல்வியால் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்திருப்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். நான் கொடுத்த வாக்குறுதியின்படி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி வழங்கப்படுவது உறுதி. அதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். நான் கொடுத்த வாக்குறுதியை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றுவேன். ஏனெனில் அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் தான், எனது தலைமையிலான பா.ஜனதா அரசு அமைக்க முடிந்தது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க கூடிய விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இதுதொடர்பாக டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளேன். கட்சி மேலிடத்தின் அனுமதி பெற்று விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத்தை சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன்.
முன்னாள் முதல்-மந்திரி நிஜலிங்கப்பா நமது மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு பணிகளை ஆற்றி உள்ளார். அவரது வழியில் நான் உள்பட அனைவரும் செயல்பட வேண்டும். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள நிஜலிங்கப்பா வாழ்ந்த வீட்டை புனரமைக்க வேண்டும் என்று அரசிடம் நீண்ட நாளாக கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வீட்டை, அரசு விலைக்கு வாங்கி புனரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பொறுப்பு போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.” இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
ஆனால் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜிக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்த கேள்விக்கோ, இடைத்தேர்தல் தோல்வியால் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்திருப்பது குறித்த கேள்விக்கோ பதிலளிக்காமல் முதல்-மந்திரி எடியூரப்பா சென்று விட்டார்.
இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 இடங்களில் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் நிலையான ஆட்சிக்கு வழி கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் யார்-யாருக்கு என்னென்ன பதவி? மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? என கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பெங்களூருவில் கூடி ஆலோசிப்போம் என்று ரமேஷ் ஜார்கிகோளி கூறி இருப்பது மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்துள்ள இவர்கள் பா.ஜனதாவில் தொடர்ந்து தனி அணியாக செயல்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் காலியாக இருந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 11 தொகுதிகளில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.க்களாகி உள்ளனர். அவர்களுக்கு மந்திரிபதவி வழங்கப் படும் என்று பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.