கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-12-09 22:30 GMT
கடலூர், 

கடலூர் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை முறையாக அமல்படுத்தி, அனைவருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளீச்சிங் பவுடர் போட வேண்டும்.

நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். கொசுத்தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகவே நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் கே.எஸ்,ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட அவை தலைவர் து.தங்கராசு, முன்னாள் நகரசபை தலைவர் ஏ.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுந்தர், நகர துணை செயலாளர்கள் அஞ்சாபுலி, சுந்தரமூர்த்தி, மாணவரணி நடராஜன், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி.பெருமாள், நகர இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை செயலாளர்கள் ஜெயசீலன், பிரசன்னா, ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் ராமு, அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அவர்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்