திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 2 அடுக்கு வேகன்கள் தயாரிப்பு பணி தீவிரம்

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 2 அடுக்கு வேகன்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-12-07 23:00 GMT
திருச்சி,

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில் என்ஜின் புனரமைப்பு, பெட்டிகள் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சரக்கு ரெயிலுக்கான வேகன்களும் தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் வேகன்கள் இந்தியன் ரெயில்வேக்கும், அதன் துணை நிர்வாகத்திற்கும், தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சமீபத்தில் கன்டெய்னர்களை கொண்டு செல்லக்கூடிய வேகன்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

2 அடுக்கு வேகன்

இந்த நிலையில் 2 அடுக்கு (டபுள் டக்கர்) வேகன் ஆயிரம் எண்ணிக்கையில் தயாரிக்க பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்டர் கிடைத்தது. இதையடுத்து அதனை தயாரிக்கும் பணியில் பணிமனை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘டபுள் டக்கர் வேகனில் 2 கன்டெய்னர்களை ஏற்றி செல்ல முடியும். முதல் கட்டமாக 45 வேகன்கள் இந்த மாத இறுதியில் கன்டெய்னர் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும் அடுத்த ஆண்டுக்குள் (2020) மொத்த ஆர்டரை முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்