உத்திரமேரூர் அருகே வீட்டின் அருகே கால்வாய் அமைக்க எதிர்ப்பு; ஒருவர் தீக்குளிக்க முயற்சி
உத்திரமேரூர் அருகே வீட்டின் அருகே கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த புத்தளி கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இந்த மழைநீர் அந்த பகுதி கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அரசு அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அரசு அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு தற்காலிகமாக சாலையோரம் கால்வாய் அமைத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சதாசிவம் என்பவர் அவரது வீட்டின் அருகே கால்வாயை அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீரென சதாசிவம் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து கொண்டு வந்து தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அரசு அலுவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் கால்வாய் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது.