பையை பறிக்க முயன்ற கொள்ளையர்களுடன் போராடிய பெண் பலி - மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்
பையை பறிக்க முயன்ற கொள்ளையர்களுடன் போராடியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
ஆலந்தூர்,
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர் முருகலட்சுமி (வயது 49). இவர், கடந்த மாதம் 22-ந் தேதி தனது மகன் சண்முகசுந்தரத்துடன் மோட்டார் சைக்கிளில் சேலையூரில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்றார். பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே வந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 கொள்ளையர்கள், திடீரென முருகலட்சுமியின் கையில் இருந்த பையை பிடித்து இழுத்து பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட முருகலட்சுமி, பையை பறிக்க விடாமல் கெட்டியாக பிடித்தபடி கொள்ளையர்களுடன் போராடினார்.
இதில் முருகலட்சுமி நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதையடுத்து கொள்ளையர்கள், மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இதையடுத்து சண்முகசுந்தரம், பேச்சு மூச்சு இன்றி கிடந்த தனது தாய் முருகலட்சுமியை அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அண்ணாநகரில் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார், ஏற்கனவே வழிப்பறி முயற்சியில் காயம் அடைந்ததாக பதிவு செய்து இருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.