சிறுபாக்கம் அருகே, குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது

சிறுபாக்கம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-28 22:15 GMT
சிறுபாக்கம், 

சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடபாதி ஏரிக்கரை அருகே மொபட்டில் வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வடபாதியைச் சேர்ந்த ராயப்பிள்ளை(வயது 56) என்பதும் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேற்படி சாராய வியாபாரி மீது சிறுபாக்கம் மற்றும் விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ்நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே ராயப்பிள்ளையின் குற்ற செயலை தடுக்கும் வகையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர்அன்பு செல்வன் உத்தரவின் பேரில் ராயப்பிள்ளையை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை மத்திய சிறையில் இருக்கும் ராயப்பிள்ளை யிடம் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்