சேலத்தில் தொழிலாளி மர்ம சாவு

சேலத்தில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2019-11-28 22:00 GMT
சேலம்,

சேலம் கிச்சிப்பாளையம் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது 50), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் இவருடைய வீட்டில் இருந்து நேற்று பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பிணம்

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அழுகிய நிலையில் மனோகரன் பிணம் கிடந்தது. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதனால் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் மனோகரன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்