கூத்தாநல்லூர் அருகே இடிந்து விழுந்த நடை பாலத்தின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
கூத்தாநல்லூர் அருகே இடிந்து விழுந்த நடை பாலத்தின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உச்சுவாடி என்ற இடத்தில் வெண்ணாற்றின் குறுக்கே நடை பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை அரிச்சந்திரபுரம், வடபாதிமங்கலம், உச்சுவாடி வடக்கு தெரு, தெற்கு தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, இரட்டை தெரு, ஒற்றை தெரு, தாமரைகுளம் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சோலாட்சி, பெரியகொத்தூர், மன்னஞ்சி, ராமநாதபுரம், சேந்தங்குடி உள்ளிட்ட கிராமப்புற மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கும், பொதுமக்கள் கடைவீதிகளுக்கும் இந்த பாலத்தின் வழியாக தான் சென்று வரவேண்டும். இந்தநிலையில் இந்த பாலத்தின் தரைத்தளம் திடீரென இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தின் நடுபகுதியில் செல்ல முடியாத நிலையும், பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
சீரமைத்து தர வேண்டும்
பாலத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்த இடத்தில் மரப்பலகையை வைத்து பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், முதியோர் ஆற்றை கடந்து சென்று வருகிறார்கள். இதனால் ஆற்றில் விழுந்து விபரீதம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் நிலவியுள்ளது. இரவு நேரத்தில் சிலர் ஆற்றுக்குள் விழுந்து காயமும் அடைந்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழுந்த நடை பாலத்தின் தரைத்தளத்தை உடனே சீரமைத்து தரவேண்டும். மேலும் வரும் காலத்தில் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் சிமெண்டு பாலம் அதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.