விக்கிரவாண்டி அருகே, வி‌‌ஷவண்டு கடித்து பிளஸ்-2 மாணவி சாவு

விக்கிரவாண்டி அருகே வி‌‌ஷவண்டு கடித்து பிளஸ்-2 மாணவி இறந்தார்.

Update: 2019-11-27 22:45 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியை அடுத்த வடகுச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகள் வி‌‌ஷ்ணுப்பிரியா (வயது 17). இவர் விழுப்புரம் அருகே சிந்தாமணியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சம்பவத்தன்று மாணவி வி‌‌ஷ்ணுப்பிரியா, தனது வீட்டில் இருந்தபோது வி‌‌ஷ வண்டு கடித்தது. இதில் மயக்கமடைந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாணவி வி‌‌ஷ்ணுப்பிரியாவுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மாணவி வி‌‌ஷ்ணுப்பிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்