தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் ; தினேஷ் குண்டுராவ் பேட்டி

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

Update: 2019-11-27 23:00 GMT
பெலகாவி, 

கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு மானம், மரியாதை இல்லை. 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஒன்றில் கூட பா.ஜனதா வெற்றி பெற முடியாது. கர்நாடகத்தில் மாநில அரசு என்று உள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 2 மாதமாக பா.ஜனதா அரசு செத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் சுயநலத்திற்காக பா.ஜனதாவுக்கு சென்றுள்ளனர். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பற்றி மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.

கோகாக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லகன் ஜார்கிகோளி வெற்றி பெறுவது உறுதி. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார். அவருக்கு கொள்கை எதுவும் இல்லை. அவர் மந்திரியாக இருந்தபோது செய்த சாதனைகள் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

மேலும் செய்திகள்