வானவில் : எம்.ஐ. ஸ்மார்ட் இரவு விளக்கு
எம்.ஐ. தற்போது புதிய ரக பல்பை உருவாக்கியுள்ளது.
ஜியோமி குழுமத்தின் அங்கமான எம்.ஐ. தற்போது புதிய ரக பல்பை உருவாக்கியுள்ளது. ‘நைட் லைட் 2’ என்ற பெயரில் இது விற்பனைக்கு வந்துள்ளது. ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே இது எரியும். இல்லையெனில் இத தானியங்கி முறையில் அணைந்துவிடும். இதில் 360 டிகிரி கோணத்தில் சுழலும் காந்த விசை உள்ளது. இது 3.ஏ.ஏ. பேட்டரியில் செயல் படக் கூடியது. இதில் மனித உருவத்தை அடையாளம் காணக்கூடிய சென்சார் உள்ளது. இது செயல்பட்டு விளக்கை எரியச் செய்யும். இதில் லேசாக மற்றும் பளரென வெளிச்சம் பரவக் கூடிய வகையில் இரு நிலைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். விளக்கு எரியும் பகுதியில் 15 விநாடிகளுக்கு பிறகு எவ்வித நடமாட்டமும் இல்லாது போனால் இது அணைந்துவிடும். எம்.ஐ. இணையதளத்தில் இதை ஆர்டர் செய்யலாம். இதன் விலை சுமார் ரூ.500.