கடலூர் செல்லும் வழியில்: புதுவை வந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு - அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு
கடலூர் செல்லும் வழியில் புதுவை வந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி,
கடலூரில் தமிழக அரசு சார்பில் ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புதுச்சேரி வழியாக கடலூர் சென்றனர்.
புதுவை மரப்பாலம் சந்திப்பில் அ.தி்.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அவர்களுக்கு சால்வை, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் எல்லைப்பி்ள்ளைசாவடி 100 அடி ரோட்டில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு உள்ள ஜெயலலிதாவின் சிலை மற்றும் உருவப்படத்துக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் காசிநாதன், ராமதாஸ், துணை செயலாளர்கள் கோவிந்தம்மாள், மாசிலா குப்புசாமி, செல்வராஜ், மகளிர் அணி விஜயலட்சுமி, வக்கீல் ராமலிங்கம், தொகுதி செயலாளர்கள் மணி, சக்கரவர்த்தி, மணவாளன், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடலூர் விழாவில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிற்பகலில் புதுவை சன்வே ஓட்டலில் வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
அதன்பின் மாலையில் சென்னை புறப்பட்டு சென்றார்.