கள்ளக்காதலி தீ வைத்து எரித்த போலீஸ்காரர் சாவு
போலீஸ் குடியிருப்பில் கள்ளக்காதலியால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ்காரர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஆவடி,
ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2-ம் பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் வெங்கடேஷ் (வயது30). இவர், ஜெயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்
கருத்து வேறுபாடு காரணமாக ஜெயா, கணவரை விட்டு பிரிந்து மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தனது மகளுடன் வெங்கடேஷ் வசித்து வந்தார். வெங்கடேசுக்கு, ஆஷா (31) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. ஆஷாவும் திருமணமானவர். கணவர், 2 மகன்களை விட்டு பிரிந்து வெங்கடேஷ், அவரது மகளுடன் போலீஸ் குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தார்.
இதற்கிடையில் வெங்கடேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஆஷா அடிக்கடி தகராறு செய்து வந்தார். 23-ந்தேதி நள்ளிரவில் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஆஷா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரர் வெங்கடேஷ் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் ஆஷா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்து உள்ள வாக்குமூலத்தில், “என்னை விட்டுவிட்டு 3-வதாக வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் ஆத்திரத்தில் போலீஸ்காரர் வெங்கடேசை தீ வைத்து கொளுத்தியதாக” கூறி இருந்தார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் வெங்கடேஷ் நேற்று அதிகாலை 5.50 மணியளவில் பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் மனைவி ஜெயாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து திருமுல்லைவாயல் போலீசார், ஆஷா மீது கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். போலீஸ் குடியிருப்பிலேயே கள்ளக்காதலியால் போலீஸ்காரர் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.