நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்டார் வட்டார முதல்வர் மைக்கிள் ஏஞ்சலுஸ், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை டோனி ஜெரோம், பேராலய நிர்வாகிகள், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தேர் பவனி
திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி நடைபெறுகிறது. டிசம்பர் 1-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஓய்வுபெற்ற கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடைபெறுகிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
2-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு ஆராதனையும், நற்கருணை ஆசீர், இரவு 10.30 மணிக்கு தேர்பவனியும் நடைபெறுகிறது.
கூட்டு திருப்பலி
3-ந்தேதி காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேர் பேராலயத்தை வந்தடைகிறது. தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை நிர்வாகிகள் செய்து உள்ளனர்.