சர்ச்சைக்கு சொந்தக்காரர்,துணை முதல்-மந்திரி அஜித் பவார்
மராட்டிய துணைமுதல்-மந்திரியாகபதவி ஏற்று உள்ள அஜித் பவார் 1959-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி அகமதுநகர் மாவட்டம் தேவ்லாலி பிரவரா பகுதியில் பிறந்தவர்.
அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் ஆனந்த் ராவ் பவாரின் மகன் ஆவார். ஆனந்த்ராவ் பவாா் பிரபல சினிமா தயாரிப்பாளர் சாந்தாராமிடம் பணிபுரிந்தவர்.
அஜித் பவார் பள்ளியில் படித்து கொண்டு இருந்த போது தந்தை திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் படிப்பை கைவிட்டு குடும்பத்தை கவனித்தார். அப்போது அஜித்பவார் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்தார். பின்னாட்களில் அவர் பட்டப்படிப்பை முடித்தார்.
இந்தநிலையில் அவரது சித்தப்பா சரத்பவார் அரசியலில் வளரும் தலைவரானார். அவர் மூலமாக அஜித்பவாரும் அரசியலில் நுழைந்தார். 1982-ம் ஆண்டு முதல் முறையாக அஜித் பவார் சர்க்கரை ஆலை கூட்டுறவு வாரிய தலைவரானார். 1991-ம் ஆண்டு புனே மாவட்ட கூட்டுறவு வங்கியின் சேர்மன் ஆனார். அதன்பிறகு 16 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். 1991-ம் ஆண்டு பாராமதி எம்.பி. ஆனார். பின்னர் சரத்பவார் தேர்தலில் போட்டியிட வசதியாக எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சரத்பவார், நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசில் ராணுவ மந்திரியானார். அதே நேரத்தில் அஜித்பவார் 1991-ம் ஆண்டு பாராமதி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2019 வரை அவர் தொடர்ந்து அந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார்.
அஜித் பவார் 1991-ம் ஆண்டு சுதாகர்ராவ் நாயக் தலைமையிலான மரட்டிய மந்திரி சபையில் வேளாண்மை மற்றும் மின்சார துறை இணை மந்திரியானார். இந்தநிலையில் 1999-ம் ஆண்டு மாநிலத்தில் சரத்பவார் தலைமையிலான ஆட்சி உருவான போது அஜித்பவார் கேபினட் மந்திரியானார். அவருக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு நகர்புற மேம்பாட்டு துறை, புனே மாவட்ட பொறுப்பு மந்திரி உள்ளிட்ட பல்வேறு இலாகாக்களையும் கவனித்து வந்தார். இந்தநிலையில் 2010-ம் ஆண்டு பிரிதிவிராஜ் சவான் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்-மந்திரியானார். தற்போது மீண்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா மந்திரி சபையில் இணைந்து 2-வது முறையாக துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார்.
அஜித் பவார் இதற்கு முன்பும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது சரத்பவாாின் மகளான சுப்ரியா சுலேவுக்கு ஆதரவாக பாராமதியில் மசால்வடி என்ற கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ‘‘எனது சகோதரிக்கு எதிராக நீங்கள் ஓட்டுப்போட்டால், உங்கள் ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன்’’ என பகிரங்கமாக மிரட்டினார். இது அப்போது மிகபெரும் சர்ச்சையாக வெடித்தது. இதேபோல 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பையா தேஷ்முக் என்ற விவசாயி மும்பையில் பல நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசிய அஜித் பவார் ‘‘பையா தேஷ்முக் 55 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். அணைகளில் தண்ணீர் இல்லை. எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும்?. நாங்கள் சிறுநீர் கழிக்கவா முடியும்?. குடிக்கவே தண்ணீர் இல்லை. அதனால் சிறுநீர் கழிக்க கூட முடியாது’’ என கூறி சர்ச்சையில் சிக்கியவர் ஆவார். இதுதவிர அவர் மீது கூட்டுறவு வங்கி ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பல சர்ச்சைகளில் சிக்கினாலும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மராட்டிய மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், அஜித்பவார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.