தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து: காங்கிரசார் ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி தலைமையில் திரளான தொண்டர்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து, தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.பி, மயூரா எஸ்.ஜெயக்குமார், தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் பேசும் போது, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்திய பொருளாதாரம் பின்தங்கி உள்ளது.
இந்தியாவில் ஏழை எளிய மக்களின் வருமானம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பெருமுதலாளிகள், பா.ஜனதா கட்சியினரின் வருமானம் உயர்ந்து வருகிறது. அமித்ஷாவின் மகன் வருமானம் 2 ஆண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் சீனிவாசன்(வடக்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.